காரைக்குடி அருகே மர்மமான முறையில் பெண் கொலை - உறவினர்கள் சாலை மறியல்...!


காரைக்குடி அருகே மர்மமான முறையில் பெண் கொலை - உறவினர்கள் சாலை மறியல்...!
x
தினத்தந்தி 17 April 2022 11:00 AM IST (Updated: 17 April 2022 10:45 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அருகே மர்மமான முறையில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுதந்திரபுரத்தை சேர்ந்தகூலி தொழிலாளி புவனேஷ்வரி. இவர் கணவன் உதயசூரியன இறந்து விட்டதால் மனநிலை சரியில்லாத மகள் சுகன்யா (வயது 28)  உடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் மகன் சுகன்யா வெடத்தையனார் கோவில் திருவிழாவில் அன்னதானம் சாப்பிட்டு வருவதாக கூறி நேற்று மதியம் சென்றுள்ளார். இரவு வெகு நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர். 

அப்போது சுதந்திரபுரம் முந்திரிக் காட்டிற்குள் பெண்ணின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் சம்பவம் இடத்துக்கு சென்று போலீசார் நடத்திய விசாரணையில், காணாமல்போன சுகன்யா என்பது தெரியவந்தது. 

அவரது ஆடை கிழிக்கப்பட்டு அலங்கோலமாக கிடந்ததால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சாக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி  வருகின்றனர்.

இதனை அறிந்த அதிர்ச்சி அடைந்த  சுகன்யாவின் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் குற்றவாளியை விரைந்து கைது செய்யக்கோரி புதுவயல்-அறந்தாங்கி சாலையை மறித்து போராட்டம் நடத்தினர். 

அப்போது அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்தை நடத்தினர். பின்னர், குற்றவாளியை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் புதுவயல்-அறந்தாங்கி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 


Next Story