மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்க புறப்பட்டார் கள்ளழகர்...!
மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்க கள்ளழகர் புறப்பட்டார்.
மதுரை,
மதுரை சித்திரை திருவிழா கடந்த 5-ந்தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 14-ந்தேதியும், தேரோட்டம் நேற்று முன்தினமும் கோலாகலமாக நடைபெற்றன.
சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பச்சை பட்டு உடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் அமர்ந்திருந்த கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்கினார்.
வைகை ஆறு மற்றும் அதன் அக்கம்பக்க பகுதிகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்து அழகரை தரிசித்தனர்.
இந்த நிலையில், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்க கள்ளழகர் புறப்பட்டார். வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்ட கள்ளழகர் பிற்பகலில் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருள்கிறார். அதன் பின்னர் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளிக்கிறார்.
சேஷ வாகனத்தில் புறப்பட்ட கள்ளழகரை வழி நெடுகிலும் குவிந்துள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story