சென்னை: வங்கிக்குள் புகுந்த கன்டெய்னர் லாரியால் பரபரப்பு...!


சென்னை: வங்கிக்குள் புகுந்த கன்டெய்னர் லாரியால் பரபரப்பு...!
x
தினத்தந்தி 17 April 2022 4:00 PM IST (Updated: 17 April 2022 3:48 PM IST)
t-max-icont-min-icon

காரணைப்புதுச்சேரி அருகே வங்கிக்குள் புகுந்த கன்டெய்னர் லாரியால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

சென்னை கோயம்பேட்டிலிருந்து செங்கல்பட்டு நோக்கி ஒரு கன்டெய்னர் லாரி இன்று விடியற்காலையில் சென்று கொண்டிருந்தது. ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி சிக்னல் அருகே வரும்போது காரணைப்புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி செல்வதற்காக ஒரு பஸ் சாலையை கடக்க முயன்றது. 

அப்போது அந்த பஸ்சின் மீது கன்டெய்னர் லாரி மோதி விடாமல் இருப்பதற்காக ஓட்டுநர் சந்திரசேகர் எதிர்ப்புறமாக உள்ள ஜி.எஸ்.டி. சாலை பக்கம் லாரியை திருப்பி உள்ளார். அப்போது சாலையோரமாக இருந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் நுழைவாயில் பகுதியில் உள்ளே கன்டெய்னர் லாரி புகுந்தது.

 இதில் வங்கியின் முன்பகுதி இரும்பு ஷட்டர் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் வங்கியின் முன்பக்க சுவர் சேதமடைந்தன. இதில் கன்டெய்னர் லாரியின் முன்பக்க டயர் கழன்று லாரியை விட்டு தனியாக ஓடியது.

 இந்த விபத்தில் டிரைவர், கிளீனர் ஆகிய இருவரும் லேசான காயம் அடைந்தனர். விபத்து ஏற்ப்பட்ட அந்த சமயத்தில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story