தூத்துக்குடி: எட்டயபுரத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை....!
எட்டயபுரத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
எட்டயபுரம்,
தென்தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகின்றது. இந்த மழையால் சுற்றலா தலமான குற்றாம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் கோடை காலத்திலும் குற்றால அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
இப்படி தென் மாவட்டங்களில் பரவலாக பெய்த மழையானது கோடை வெயிலின் தாக்கத்தை தணித்து தண்ணீர் பற்றாக்குறையை போக்கியதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம், விளாத்திகுளம், புதூர் பகுதிகளில் தொடர்ந்து கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருகிறது.
அந்த வகையில் எட்டயபுரம் பகுதிகளில் இன்று காலை வெயில் சுட்டெரித்தது வந்த நிலையில் மதியம் 3 மணி அளவில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது. இந்த மழையால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிந்த சூழல் நிலவுகின்றது.
Related Tags :
Next Story