நிலத்தகராறு: நெல்லையில் பெண் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..!


நிலத்தகராறு: நெல்லையில் பெண் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..!
x
தினத்தந்தி 17 April 2022 5:02 PM IST (Updated: 17 April 2022 5:41 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே ஆழ்குழாய் கிணறு அமைப்பது சம்பந்தமாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பெண் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.

நெல்லை,

நெல்லை அருகே உள்ள மானூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட நாஞ்சான்குளம் கிராமத்தில் நிலத்தகராறு மற்றும் ஆழ்குழாய் கிணறு அமைப்பது சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 5 பேரையும் போலீசார் மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படும் நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story