கடலில் மூழ்கிய 3 பெண்கள் மீட்பு
சுற்றுலா வந்த இடத்தில் குளித்த போது அலையில் சிக்கி கடலில் மூழ்கிய 3 பெண்களை அங்கிருந்தவர்கள் மீட்டனர்.
சுற்றுலா வந்த இடத்தில் குளித்த போது அலையில் சிக்கி கடலில் மூழ்கிய 3 பெண்களை அங்கிருந்தவர்கள் மீட்டனர்.
அலையில் சிக்கினர்
புதுச்சேரியில் நேற்று கடலின் சீற்றம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. இந்தநிலையில் சுற்றுலா பயணிகளில் பலர் தலைமை செயலகத்திற்கு எதிரே உள்ள செயற்கை மணல் பரப்பு பகுதியில் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள் கடற்கரைக்கு வந்தனர். அவர்களில் 3 பேர் கடலில் இறங்கி குளித்தனர்.
அந்த சமயத்தில் கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கிய 3 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதைப்பார்த்ததும் அவர்களுடன் வந்து இருந்த மற்றொரு பெண் ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று அபயக்கரல் எழுப்பினார். உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து கடலுக்குள் இறங்கி அலையில் சிக்கித்தவித்த 3 பெண்களையும் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு
இதுபற்றிய தகவல் அறிந்து பெரியகடை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தலைமை செயலகம் எதிரே செயற்கை மணல் பரப்பு பகுதியில் கடலில் இறங்கி குளித்துக்கொண்டு இருந்தவர்களை உடனடியாக வெளியேறும்படி எச்சரித்தனர். கடலின் சீற்றம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. எனவே பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் யாரும் கடலுக்குள் இறங்கி குளிக்க வேண்டாம் என்று ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Related Tags :
Next Story