தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று அதிகரிப்பு


கோப்புப் படம் (பிடிஐ)
x
கோப்புப் படம் (பிடிஐ)
தினத்தந்தி 17 April 2022 8:28 PM IST (Updated: 17 April 2022 8:29 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நேற்று 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.  இன்றைய  கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இன்று புதிதாக 16 ஆண்கள், 14 பெண்கள் என மொத்தம் 30 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 19 பேர் உள்பட 9 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 29 மாவட்டங்களில் யாரும் புதிதாக பாதிக்கப்பட்டவில்லை.

அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், தென்காசி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட 15 மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகி உள்ளது.

தமிழகத்தில் இன்றைய  நிலவரப்படி 10 பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 24 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். தற்போது சிகிச்சையில் 231 பேர் உள்ளனர்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story