மீன்களின் விலை உயர்வு
புதுச்சேரியில் மீன்களின் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் மீன்களின் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது.
மீன்பிடி தடைகாலம்
புதுச்சேரி நீண்ட கடற்கரை கொண்ட மாநிலம் ஆகும். இங்கு ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. விசைப்படகுகள், நாட்டுப்படகு மூலம் மீன் பிடிக்கப்பட்டு ஏலம் விடப்படுகிறது. சில்லறை விற்பனையும் நடக்கிறது.
இந்தநிலையில் கடந்த 15-ந்தேதி முதல் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்லவில்லை. நாட்டுப்படகுகள் மட்டுமே சிறிய தூரத்தில் மீன்பிடித்து வருகின்றன. இதில் போதுமான மீன்கள் வரத்து இல்லை. இருப்பினும் தேவை அதிகரித்துள்ளால் மீன்கள் இரு மடங்காக உயர்ந்துள்ளது.
விலை உயர்வு
கூறு ஒன்று ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட நாட்டு கவளை ரூ.100-க்கும், ரூ.200-க்கு விற்ற சங்கரா ரூ.300-க்கும், 1 கிலோ ரூ.600-க்கு விற்ற கொடுவா ரூ.800-க்கும், ரூ.800-க்கு விற்பனை செய்த வஞ்சரம் ரூ.1000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
புதுச்சேரி பெரிய மார்க்கெட், நெல்லித்தோப்பு மார்க்கெட், உப்பளம் சாலை ஆகிய இடங்களில் முன்பை விட குறைவான பெண் வியாபாரிகளே இருந்து மீன்களை விற்பனை செய்தனர். அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இறைச்சி கடைகளில் கூட்டம்
மீன்களின் விலை அதிகரித்ததாலும், விரும்பிய மீன்கள் கிடைக்காததாலும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் பலர் மீன் வாங்குவதை கைவிட்டு இறைச்சி கடைகளுக்கு சென்றனர். இதன்காரணமாக புதுச்சேரியில் இன்று ஆடு, கோழி இறைச்சி கடைகளில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. இன்று ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூ.600 முதல் ரூ.800 வரைக்கும், ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.200 முதல் ரூ.240 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story