ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 April 2022 11:08 PM IST (Updated: 17 April 2022 11:08 PM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு கடந்த 13 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் கடைசி ஒரு வாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சர்வர் முடங்கியதால், ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பம் செய்ய முடியவில்லை என பா.ம.க. இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய வசதியாக இரு வாரம் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

Next Story