விமான நிலையத்தில் கண்கவர் புகைப்பட கண்காட்சி - அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்..!
கோவை விமான நிலையத்தில் சுற்றுலாத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.
கோவை,
கோவை விமான நிலையத்தில் சுற்றுலாத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.
தமிழர்களின் பாரம்பரியம், கலை மற்றும் வாழ்வியலை பறைசாற்றும் விதமாக கோவை விமானநிலையத்தில் கண்கவரும் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் இன்று காலை திறந்து வைத்தார்.
இந்த கண்காட்சியில் தமிழர்களின் நாட்டுப்புறக் கலைகளை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாதுறை முதன்மைச் செயலாளர் சந்திரன், சுற்றுலா துறை இயக்குனர் சந்திப் நந்தூரி, விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன், கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால், மேயர் கல்பனா, துணைமேயர் வெற்றிச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story