கார் விபத்தில் பலியான தமிழக டேபிள் டென்னிஸ் வீரருக்கு சட்டசபையில் இரங்கல்


கார் விபத்தில் பலியான தமிழக டேபிள் டென்னிஸ் வீரருக்கு சட்டசபையில் இரங்கல்
x
தினத்தந்தி 18 April 2022 10:50 AM IST (Updated: 18 April 2022 10:50 AM IST)
t-max-icont-min-icon

கார் விபத்தில் பலியான தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளனுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

சென்னை,

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 6-ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. அன்றைய தினம் முதல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வந்தது. கடந்த 13-ம் தேதி வேளாண்மை, மீன் வளம், கால்நடை, பால்வளத்துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.

இதையடுத்து 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை 4 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில்,  தமிழக சட்டசபை காலை 10 மணிக்கு தொடங்கியது. சட்டசபை தொடங்கியதும் முதலில் மேகாலயா மாநிலத்தில் கார் விபத்தில் பலியான தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளனுக்கு இரங்கல் மற்றும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்து துயர் தணிப்பு துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

Next Story