விநாயகர் கோவில் அருகே பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு..!
திருவண்ணாமலை அருகே விநாயகர் கோவிலில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தையை பொதுமக்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே தூசி போலீஸ் நிலையம் உள்ளது. இன்று காலை 4 மணி அளவில் போலீஸ் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவில் பக்கத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டு உள்ளது.
பின்னர் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அழுது கொண்டிருந்த பிறந்து சில நாட்களே ஆனா ஆண் குழந்தையை மீட்டு தூசி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அப்போது பணியில் இருந்த போலீசார் குழந்தையை சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குழந்தையை விநாயகர் கோவில் அருகே போட்டு சென்றவர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story