கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 217 பேரிடம் விசாரணை ஐகோர்ட்டில் போலீஸ் தகவல்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் மேல்விசாரணையில் 217 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
சென்னை,
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதி நள்ளிரவில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இதில் காவலாளி ஓம் பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார். முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கேரளாவை சேர்ந்த தீபு, சயான், சந்தோஷ்சாமி உள்ளிட்டோரை கைது செய்தனர். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை நீலகிரி கோர்ட்டில் தாக்கல் செய்து, அங்கு விசாரணை நடந்து வருகிறது.
அனுமதி வேண்டும்
இந்த நிலையில் இந்த வழக்கில், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன், சம்பவம் நடக்கும்போது நீலகிரியில் கலெக்டராக இருந்த சங்கர், போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, அ.தி.மு.க. நிர்வாகி சஜீவன், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், கூடலூரை சேர்ந்த சுனில் ஆகியோரை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி வேண்டும் என்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சயான், சந்தோஷ்சாமி ஆகியோர் நீலகிரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
சசிகலாவுக்குத்தான் தெரியும்
இந்த மனுவை தள்ளுபடி செய்த நீலகிரி கோர்ட்டு, நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தீபு உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர். கோடநாடு பங்களாவில் என்னென்ன பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன? என்பது குறித்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்குத்தான் தெரியும். இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து, இந்த வழக்கில் கைதான சயான் பேட்டி கொடுத்துள்ளார். எனவே, இவர்கள் உள்பட அனைவரிடமும் விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும். கீழ் கோர்ட்டு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.
மேல்விசாரணை
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் ஆஜரான சிறப்பு வக்கீல் ஷாஜகான், “இந்த கொலை, கொள்ளை வழக்கில் போலீசார் மேல் விசாரணை நடத்துகின்றனர்.
இந்த விசாரணையில், இதுவரை 217 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி, அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். எனவே, இந்த மனு மீதான விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்” என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை 6 வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story