குழந்தை இல்லாத ஏக்கத்தில் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை..!


குழந்தை இல்லாத ஏக்கத்தில் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை..!
x
தினத்தந்தி 19 April 2022 2:52 PM IST (Updated: 19 April 2022 2:52 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே உள்ள பண்ணைப்பட்டியைச் சேர்ந்த மணிவேல் (வயது 24). இவருக்கும் முத்துப்பாண்டியம்மாள் என்பவருக்கும் திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை.

இந்நிலையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மன உலைச்சலில் இருந்த மணிவேல் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து விஷம் குடித்துள்ளார்.

இதை பார்த்த உறவினர்கள் உடனே அவரை மீட்டு  திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து எரியோடு போலீசில் முத்துப்பாண்டியம்மாள் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.







Next Story