மதுக்கடைகளை மூடவேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


மதுக்கடைகளை மூடவேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 April 2022 12:38 AM IST (Updated: 20 April 2022 12:38 AM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் குழந்தையை கொன்ற தந்தை: மதுக்கடைகளை மூடவேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணிராமதாஸ் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி தாளமுத்துநகரில், குடிபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட மோதலில் 2 வயது குழந்தையை சுவற்றில் அடித்து கணவன் கொலை செய்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். குடி மனிதனை கொடூரமாக்கும் என்பதற்கு, இதுதான் சிறந்த உதாரணம் ஆகும்.

அனைத்து குற்றங்களுக்கும் பிறப்பிடமாக விளங்குவது மதுதான். மது வணிகம் தொடரும் வரை, மனித குலத்துக்கு எதிரான இத்தகைய கொடிய குற்றங்களை தடுத்து நிறுத்த முடியாது.

குற்றங்கள் இல்லாத அமைதியான தமிழகத்தை உருவாக்க, தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூடி, முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story