மாமல்லபுரம் செல்ல கட்டணம் வசூலிப்பது குப்பைக் கிடங்குக்குள் நுழையவா? ஐகோர்ட்டு கேள்வி


மாமல்லபுரம் செல்ல கட்டணம் வசூலிப்பது குப்பைக் கிடங்குக்குள் நுழையவா? ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 20 April 2022 12:46 AM IST (Updated: 20 April 2022 12:46 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம் செல்ல கட்டணம் வசூலிப்பது குப்பைக் கிடங்குக்குள் நுழையவா? ஐகோர்ட்டு கேள்வி.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவுகள் ஆகியவை பக்கிங்காம் கால்வாயில் கொட்டப்பட்டு, கால்வாய் பகுதி குப்பை பிரிக்கும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில், மனுதாரர் தரப்பில் கூறப்படும் இடத்தில் குப்பைக் கிடங்கு செயல்படவில்லை எனக் கூறி, புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், 2008-ம் ஆண்டு முதல் குப்பைக் கிடங்கு செயல்பட்டுவருவதாக நீதிபதிகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், ‘யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தை முறையாக பராமரிக்க வேண்டும். ஆனால், முறையாக பராமரிக்காதது துரதிருஷ்டவசமானது. இதற்கு காரணமான அதிகாரியை தண்டிக்க வேண்டும். மாமல்லபுரம் செல்லும்போது பேரூராட்சி சார்பில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணம் குப்பைக் கிடங்குக்குள் பொதுமக்கள் நுழையவா?’ என்று கேள்வி எழுப்பினர். பின்னர் வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Next Story