உறவுக்கார பெண்களை ஆபாச படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் - போலீசார் விசாரணை
பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு உறவுக்கார பெண்களை ஆபாச படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த பட்டதாரி வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திரு.வி.க. நகர்,
சென்னை ஓட்டேரி பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணா (வயது 21). பி.காம். பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் மீது அவரது வீட்டில் வசித்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 55 வயது, 40 வயது மற்றும் 27 வயதுள்ள உறவுக்கார பெண்கள் ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.
அதில், நாங்கள் வீட்டில் துணி துவைக்கும் போதும், லேசாக ஆடை விலகிய நிலையில் இருக்கும் போதும் எங்களுக்கு தெரியாமல் அந்த வாலிபர் செல்போனில் படம் பிடித்து பணம் சம்பாதிக்கும் நோக்கில் அதை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு அந்த புகாரில் தெரிவித்திருந்தனர்.
விசாரணை
இந்த சம்பவம் குறித்து ஓட்டேரி போலீசார் வாலிபரிடம் விசாரித்து வருகின்றனர். பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு வீட்டில் வசிக்கும் உறவுக்கார பெண்களையே ஆபாச படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story