டெல்லி புறப்பட்டார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி..!


டெல்லி புறப்பட்டார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி..!
x
தினத்தந்தி 20 April 2022 10:45 AM IST (Updated: 20 April 2022 10:45 AM IST)
t-max-icont-min-icon

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு சென்றார்.

சென்னை,

2 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றார். சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்டார் கவர்னர் ஆர்.என்.ரவி.

2 நாள் பயணமாக டெல்லி செல்லும் கவர்னர் ஜனாதிபதி, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி உள்ளிட்டோரை சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும், அப்போது தமிழக நிலவரம் மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பகோரிக்கை வலுத்துள்ள நிலையில், கவர்னரின் டெல்லி பயணம் முக்கியம் வாய்ந்ததாக எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story