வெகு விமர்சையாக நடைபெற்ற சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் குண்டம் திருவிழா
சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மதித்தார்கள்.
சத்தியமங்கலம்:
ஈரோடு, சத்தியமங்கலம் வடக்கு பேட்டையில் நூறாண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்றபண்ணாரி அம்மனின் அக்காள் தண்டுமாரியம்மன் என போற்றி பக்தர்கள்அனைவரும் வழிபட்டு வருகிறார்கள்.
இங்கு வருடம் தோறும் குண்டம் மற்றும் கம்பம் விழா நடைபெறும். இதன் தொடர்ச்சியாக கடந்த 6.4.2022ஆம் தேதி புதன்கிழமை பூச்சாட்டு உடன் விழா தொடங்கியது. 7.4.2022 ஆம் தேதி வியாழக்கிழமை இரவு கம்பம் நடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தினசரி இரவு 8 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணிவரை இளைஞர்களும் பெரியவர்களும் கம்பத்தை சுற்றி கம்பம் ஆட்டம் ஆடி வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று குண்டம் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி ஆண்களும் பெண்களும் பவானி நதி கரைக்குச் சென்று அங்கு அனைவரும் குளித்து அங்கு வைக்கப்பட்டிருந்த சிறப்பு அம்மனின் சப்பரத்தை வணங்கி மேலும் கையில் வேப்பிலை ஏந்திக் கொண்டும் நனைந்த உடையுடன் வரிசையாக குண்டத்தில் இறங்கி நடந்தார்கள்.
சில பெண்கள் தங்கள் குழந்தையை நேர்த்திக் கடனுக்காக இடுப்பில் எடுத்து வைத்துக்கொண்டு குண்டத்தில் இறங்கி நடந்தார்கள். இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நடந்து சென்றார்கள்.
Related Tags :
Next Story