வடபழனி: போலீஸ்காரர் மகளிடம் செயின் பறித்த கோலமாவு வியாபாரிக்கு தர்ம அடி..!
வடபழனியில் போலீஸ்காரர் மகளிடம் செயின் பறித்து சென்ற கோலமாவு வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:
சென்னை வடபழனி பக்தவச்சலம் காலணி 1வது தெருவை சேர்ந்தவர் தாமோதரன. இவர் மத்திய ரிசர்வ் படை போலீசாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அபிராமி. இவர்கள்ளுக்கு 3 வயதில் ரித்திகா என்ற குழந்தை உள்ளது.
ரித்திகா நேற்று மாலை வீட்டு வாசலில் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சைக்கிளில் வந்த கோலமாவு வியாபாரி நைசாக ரித்திகாவிடம் பேச்சு கொடுத்தபடியே திடீரென அவள் அணிந்திருந்த 1/2 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பினார்.
குழந்தை ரித்திகாவின் அழுகுரல் கேட்டு திரண்ட அக்கம்பக்கம் உள்ளவர்கள் கோலமாவு வியாபாரியை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து வடபழனி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் செயின் பறிப்பில் ஈடுபட்டது குரோம்பேட்டை ராதா நகரை சேர்ந்த மரியான் (45) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story