செங்கோட்டை: ஆட்டோவில் தனியாக வரும் பெண்களிடம் சில்மிஷம் - டிரைவர் கைது..!


செங்கோட்டை: ஆட்டோவில் தனியாக வரும் பெண்களிடம் சில்மிஷம் - டிரைவர் கைது..!
x
தினத்தந்தி 20 April 2022 2:04 PM IST (Updated: 20 April 2022 2:04 PM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை அருகே ஆட்டோவில் தனியாக வரும் பல பெண்களிடம் சில்மிஷம் செய்து வந்த ஆட்டோ டிரைவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

செங்கோட்டை:

செங்கோட்டை, ஆரிய நல்லூர் தெருவை சேர்ந்த சுப்பிரமணியனின் மகன் கோகுல கண்ணன் (44.) இவர் செங்கோட்டை பகுதியில் சொந்தமாக ஆட்டோ வைத்து டிரைவராக இருந்து வருகிறார்.

இவர் கடந்த சில மாதங்களாக தனது ஆட்டோவில் தனியாக வரும் பெண்களிடம் பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுத்து சில்மிஷம் செய்து வந்தாக தெரிகிறது.

இது குறித்து யாரும் புகார் தெரிவிக்காததால் எவ்வித பயமுமின்றி பெண்களுக்கு தொல்லைகள் கொடுத்து உள்ளார். இந்நிலையில் இவருடைய ஆட்டோவில் வந்த ஒரு பெண்ணிடம் ஆபாசமாக பேசி சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த பெண் துணிந்து காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் செங்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை விசாரணை செய்து பெண்களிடம் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்தது தெரியவந்ததின் அடிப்படையில் ஆட்டோ டிரைவர் கோகுல கண்ணன் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தார்.

பின்பு செங்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். ஆட்டோவில் தனியாக வரும் பெண்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதில் டிரைவர் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story