கவர்னர் விவகாரம்: வீடியோவை முதல் - அமைச்சர் பார்க்க வேண்டும் - அண்ணாமலை
நான் வெளியிட்ட வீடியோவை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்க்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தருமபுரம் ஆதீனத்தைச் சந்திக்க சென்றபோது, மயிலாடுதுறையில் அவர் கார் மீதும், பாதுகாப்பு அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தி.மு.க அரசு மீது எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டிவருகின்றனர்.
இந்தநிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நான் வெளியிட்ட வீடியோவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்க்க வேண்டும். கவர்னரை வைத்து நாங்கள் அரசியல் செய்யவில்லை.
கவர்னரின் கார் மீது கொடி கம்பம் விழுந்த வீடியோவை பார்த்து விட்டுமுதல்-அமைச்சர் பேச வேண்டும். கவர்னர் கான்வாய் மோசமான நிலையில் கூட்டத்தை கடந்து சென்றுள்ளது.
கவர்னரின் பாதுகாப்பு குறித்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசுவதற்கும் வெளியில் நடந்துகொள்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்நியன், அம்பி போல அவர் நடந்து கொள்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story