இளையராஜாவுக்கு பிரதமர் மோடி நன்றி


இளையராஜாவுக்கு பிரதமர் மோடி நன்றி
x
தினத்தந்தி 20 April 2022 4:13 PM IST (Updated: 20 April 2022 4:13 PM IST)
t-max-icont-min-icon

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் நன்றி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

'புளு கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன்' என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள, 'அம்பேத்கரும், மோடியும் சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும், செயல் வீரர்களின் நடவடிக்கையும்' என்ற நுாலுக்கு, இளையராஜா அணிந்துரை எழுதியுள்ளார். அதில், 'மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்கள், திட்டங்கள் வாயிலாக, பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கண்டு, அம்பேத்கரே பெருமைப்படுவார்' என கூறியதோடு, அம்பேத்கரையும், மோடியையும் ஒப்பிட்டு பாராட்டியிருந்தார்.

இந்நிலையில், இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி,  தன்னை பற்றிய நுாலுக்கு அணிந்துரை எழுதியதற்காக நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

அம்பேத்கர் குறித்தும், அவரின் சிந்தனைகளை செயல்படுத்தி வருவது குறித்தும், பிரதமர் மோடி அடிக்கடி பேசி வருகிறார் என இளையராஜா பாராட்டியிருந்தார்.

Next Story