"பாஜகவினர் திட்டமிட்டு பதற்றத்தை உருவாக்க பார்க்கிறார்கள்" - திருமாவளவன் குற்றச்சாட்டு
பாஜக திட்டமிட்டு பதற்றத்தை உருவாக்க பார்ப்பதாக திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சித்து வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்தபோது செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.
பாஜக கட்சியைச் சார்ந்தவர்கள் இங்கு திட்டமிட்டு ஒரு பதற்றத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள். என்ன வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். வன்முறையை தூண்டுவதற்கு தொடர்ந்து வித்திட்டு கொண்டிருக்கிறார்கள். திமுக அரசு சமூக நீதி அரசாக இயங்கி கொண்டிருக்கிறது.
திமுக அரசின் மீது ஒரு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் இங்கே ஒரு முக்கியமான சக்தியாக உருப்பெற வேண்டும் என்று அவர்கள் கணக்குப்போட்டுச் செய்கிறார்கள். எனவே, கவர்னர் மீது கல்லெறிந்ததாகவோ, கொடியெறிந்ததாகவோ சொல்லுவது அபத்தமானது என்று கூறினார்.
Related Tags :
Next Story