திருச்செந்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவக்கம்...!
திருச்செந்தூர் நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கி உள்ளது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து முதல் கட்டமாக இன்று பகத்சிங் பஸ் நிலையம் எதிர்புறம் கடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை, நகராட்சி ஆணையர் வேலவன் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து காமராஜர் சாலை, வடக்கு ரதவீதி, கீழ ரதவீதி, தெற்கு ரதவீதி, மேல ரத வீதி, டி.பி. ரோடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றபடும் என நகராட்சி ஆணையர் வேலவன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story