கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் குணமடைந்தனர்


கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் குணமடைந்தனர்
x
தினத்தந்தி 20 April 2022 4:50 PM GMT (Updated: 2022-04-20T22:20:16+05:30)

புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேரும் குணமடைந்தனர்.

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 312 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் ஒருவருக்கு கூட தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை.
ஏற்கனவே தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேரில் நேற்று 2 பேர் குணமடைந்தனர். தற்போது காரைக்காலை சேர்ந்த  ஒருவர்  மட்டுமே  சிகிச்சையில் உள்ளார். அதேநேரம் நேற்று முதல் தவணை தடுப்பூசியை 187 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 1,192 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 252 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 16 லட்சத்து 65 ஆயிரத்து 970 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story