உதவித்தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி


உதவித்தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி
x
தினத்தந்தி 20 April 2022 10:40 PM IST (Updated: 20 April 2022 10:40 PM IST)
t-max-icont-min-icon

பட்டதாரிகள், ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு புதுவை, காரைக்காலில் தொழில் பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் நாளை நடக்கிறது.v

பட்டதாரிகள், ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு புதுவை, காரைக்காலில் தொழில் பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் நாளை நடக்கிறது.
புதுவை இணை தொழில் பழகுநர் பயிற்சி அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொழில் பழகுநர்
புதுவை அரசு தொழிலாளர் துறை பயிற்சி உதவி இயக்குனர் அலுவலகம் சார்பில் புதுச்சேரியில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் தொழில் பழகுநர் பயிற்சி முகாம் நாளை  (வியாழக்கிழமை) வம்பாகீரப்பாளையம் அரசு பெண்கள் தொழிற்பயிற்சி நிலையம், காரைக்கால் திரு-பட்டினம் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையம், மாகி ராஜீவ்காந்தி அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஏனாம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை நடக்கிறது.
இந்த முகாமில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மத்திய நிறுவனங்கள், மாநில நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒரே இடத்தில் கலந்துகொள்ள இருப்பதால் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.யில் பயிற்சி பெற்று தேர்ச்சிபெற்ற அனைத்து மாணவர்களும் தொழில் பழகுநர் பயிற்சியில் சேர்ந்து   தேசிய  தொழில் பழகுநர் சான்றிதழ் பெற்று பயன்பெறலாம்.
ஊக்கத்தொகை
தொழிற்பயிற்சி முடித்தவர்கள்    மட்டுமல்லாமல் அனைத்து கல்வி  அறிவு பெற்றவர்களும் 5 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள், திறன் பயிற்சி பெற்றவர்கள், பட்டயம் மற்றும் பட்டதாரிகளும் இந்த முகாமில் கலந்துகொள்ளலாம். 
பழகுநர் பயிற்சியில் சேரும் அனைவருக்கும் மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வழங்கப்படும். நாக் சான்றிதழ் பெற்றவர்கள் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றவர்களைவிட    திறன்  மிக்கவராக கருதப்படுவர்.
கல்வி சான்றிதழ்
பயிற்சி காலம் 12 முதல் 36 மாதம் வரை ஆகும். எனவே இதுநாள்வரை     தொழில் பழகுநர் பயிற்சி பெறாதவர்களும், தொழில் பழகுநர் பயிற்சி பெற தயார் நிலையில் உள்ளவர்களும் இந்த வாய்ப்பினை  பயன்படுத்தி அனைத்து கல்வி சான்றிதழ் களுடன்       வந்து  கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு  அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story