மின்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முற்றுகை
பணிநிரந்தரம் செய்யக்கோரி மின்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
பணிநிரந்தரம் செய்யக்கோரி மின்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
முற்றுகை
புதுவை மின்துறையில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக மின்கட்டுமான உதவியாளர்களாக 380 பேர் பணிபுரிகின்றனர். அவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும் உதவியாளர்களுக்கு வயர்மேனாக பதவி உயர்வு வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மின்துறை தொழில்நுட்ப சான்றிதழாளர் சங்கத்தினர் இன்று மின்துறை தலைவரும் கண்காணிப்பு பொறியாளருமான சண்முகத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தில் மின்துறை தொழிலாளர் முன்னேற்ற சங்கம், மின்சார தொழிலாளர் சங்கம், மின்துறை டிப்ளமோ சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். அவர்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தி இருந்தனர்.
பேச்சுவார்த்தை
மேலும் கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களையும் எழுப்பினார்கள். இந்த நிலையில் கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் போராட்டத்தில் ஈடுபட்ட தொழில்நுட்ப சான்றிதழாளர் சங்கத்தின் தலைவர் அருள்மொழி மற்றும் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
போராட்டம் தொடரும்
ஆனால் அதை தொழிலாளர்கள் ஏற்க மறுத்தனர். மின்துறை தனியார் மய பிரச்சினை அச்சுறுத்தி வரும் நிலையில் நாங்கள் இதனால் மிக கடுமையாக பாதிக்கப்படுவோம் என்றும் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தனர். மேலும் தங்கள் பிரச்சினை தீரும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.
Related Tags :
Next Story