‘முக்கிய நகரங்களைச் சுற்றி துணை நகரங்கள்’ - வீட்டு வசதித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்
முக்கிய நகரங்களைச் சுற்றி துணை நகரங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக வீட்டு வசதித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் வீட்டு வசதித்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், தொழிற்சாலைகள், சுகாதாரம், நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, சுற்றுச்சூழல், கல்வி போன்ற துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து பெரிய நகரங்களில் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் முக்கிய நகரங்களைச் சுற்றி துணை நகரங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் மதுரையில் வளர்ச்சி மையங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதற்கான புதுநகர் வளர்ச்சித் திட்டங்கள் தயாரிக்கப்படும் என்றும் கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story