ராட்சத அலையில் சிக்கி தொழிலாளி சாவு
புதுவை கடலில் ராட்சத அலையில் சிக்கி சேலத்தை சேர்ந்த தொழிலாளி உயிரிழந்தார்.
புதுவை கடலில் ராட்சத அலையில் சிக்கி சேலத்தை சேர்ந்த தொழிலாளி உயிரிழந்தார்.
தச்சு தொழிலாளி
சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் கார்த்தி (வயது 25). தச்சுத்தொழிலாளி. இவர் தனது நண்பர் வேல்மணி உள்பட 7 பேருடன் விழுப்புரம் மற்றும் புதுவை பிள்ளையார்குப்பத்தில் நடைபெற்ற கூத்தாண்டவர் கோவில் திருவிழாவுக்கு வந்தார்.
அதன்பின்னர் புதுவையை சுற்றிப்பார்க்க இன்று மதியம் வந்தனர். அவர்கள் புதுவை கடற்கரை மற்றும் பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர்.
ராட்சத அலையில் சிக்கினார்
அதன்பின் அவர்கள் பாண்டி மெரினா கடற் கரைக்கு சென்று குளித்த னர். அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. திடீரென்று கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கிய கார்த்தி கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டார். இதனை அறியாத அவரது நண்பர்கள் கடலில் குதுகலமாக குளித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கடலில் வாலிபர் ஒருவர் உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே வேல்மணி மற்றும் அவரின் நண்பர்கள் கடலுக்குள் சென்று தத்தளித்த நபரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது தான், அவர் தங்களது நண்பர் கார்த்தி என்பது அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
சாவு
உடனே அவரை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கார்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உயி ரிழந்த கார்த்திக்கு கவுசல்யா என்ற மனைவி உள்ளார்.
நடவடிக்கை தேவை
புதுச்சேரி கடற்கரை மற்றும் பாண்டி மெரினாவில் தொடர்ச்சியாக கடல் அலையில் சிக்கி வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் பலியாகி வருகிறார்கள். போலீசார் எச்சரிக்கையை மீறியும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் கடலில் இறங்கி குளிக்கிறார்கள். இதை தடுக்க சுற்றுலாத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Related Tags :
Next Story