மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
சங்கராபரணி ஆற்றுப்பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
வில்லியனூர் அருகே விநாயகம்பட்டு ராஜேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் சிவமூர்த்தி. இவரது மகன் சக்திவேல் (வயது 21). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 18-ந் தேதி இரவு சக்திவேலும், சித்தப்பா மகன் முருகவேலும் (20) மோட்டார் சைக்கிளில் அம்மணங்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.
செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றுப்பாலத்தின் மீது வந்தபோது எதிர்பாராதவிதமாக தடுப்பு சுவரின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த 2 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி சக்திவேல் உயிரிழந்தார். முருகவேல் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story