தனியார் நிறுவன பெண் உரிமையாளர் தற்கொலை
கடன் தொல்லையால் தனியார் நிறுவன பெண் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி வினோபாநகர் கப்ரால் வீதியை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 47). புதுவை வேளாண் துறையில் ஊழியராக பணி செய்து வருகிறார். இவரது மனைவி சத்யபிரபா (43). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சத்யபிரபா திலாஸ்பேட்டை ஸ்ரீராம் நகரில் தனது பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இவர் தனியாக கம்பெனி ஒன்று நடத்தி வந்தார். இதற்காக பலரிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. தொழிலிலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story