அமைச்சர் பெரியகருப்பன் மீதான வழக்கு ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு


அமைச்சர் பெரியகருப்பன் மீதான வழக்கு ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 21 April 2022 12:26 AM IST (Updated: 21 April 2022 12:26 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் பெரியகருப்பன் மீதான வழக்கு ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

கடந்த 2015-ம் ஆண்டு மருது பாண்டியர்கள் நினைவுநாள் அன்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள அவர்களது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது தி.மு.க.வைச் சேர்ந்த, தற்போது அமைச்சராக உள்ள பெரியகருப்பன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த செய்தித்துறை வாகனத்தை சேதப்படுத்தியதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் பெரியகருப்பன் உள்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பெரியகருப்பன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Next Story