தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்
தனியார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது.
சென்னை,
தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி சுமார் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது.
இந்த விண்ணப்ப பதிவிற்கான கால அவசாகம் மே 18-ந்தேதி வரை உள்ளது. பள்ளிக் கல்வியின் இணையதளமான rte.tnschools.gov.in மூலம் பெற்றோர் விண்ணப்பிக்க வேண்டும். இதுதொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீடு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஏப்ரல் 20-ந்தேதி தொடங்கி மே 18-ந்தேதி வரை நடைபெறும். இதில் தேர்வுசெய்யப்பட்ட மற்றும் நிராகரிக்கபப்ட்ட மாணவர்களின் விவரங்களை பள்ளிகள் மே 21-ந்தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்.
ஒரு பள்ளியில் சேர அதிக அளவிலான மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தால் மே 23-ந்தேதி குலுக்கல் முறையில் மாணவர்களை தேர்வுசெய்ய வேண்டும். ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை முடிக்கப்பட்ட விவரங்களை மே 29-ந்தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story