தங்கம் விலை பவுனுக்கு ரூ.496 குறைந்தது
தங்கம் விலை பவுனுக்கு ரூ.496 குறைந்தது ரூ.40 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.
சென்னை,
தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து கொண்டே வந்து, கடந்த 14-ந்தேதி ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.200 குறைந்து காணப்பட்டது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 25-க்கும், ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.62-ம், பவுனுக்கு ரூ.496-ம் அதிரடியாக குறைந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 963-க்கும், ஒரு பவுன் ரூ.39 ஆயிரத்து 704-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 2 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.696 சரிந்து, தங்கம் விலை மீண்டும் ரூ.40 ஆயிரத்து கீழ் வந்துள்ளது. வெள்ளி விலையும் நேற்று குறைந்து காணப்பட்டது. கிராமுக்கு 1 ரூபாய் 70 காசும், கிலோவுக்கு ரூ.1,700-ம் குறைந்து, ஒரு கிராம் 73 ரூபாய் 30 காசுக்கும், ஒரு கிலோ ரூ.73 ஆயிரத்து 300-க்கும் விற்பனை ஆனது.

Related Tags :
Next Story