4 மணி நேரம் இருளில் மூழ்கிய கடலூர் - கடும் சிரமத்திற்கு ஆளான மக்கள்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 21 April 2022 7:03 AM IST (Updated: 21 April 2022 7:03 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் 4 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

கடலூர்,

கடலூரில் 4 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். முதுநகர் துரைமுகம், திருப்பாதிரி புலியூர், வண்டிப்பாளையம், கேப்பர் மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 4 மணி நேரமாக மின் தடை ஏற்பட்டது.

பின்னர் இந்த பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகிக்கப்பட்டது. மஞ்சக்குப்பம், வண்ணாரப்பாளையம், செம்மண்டலம், அன்னாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. கேப்பர் மலை மத்திய சிறைச்சாலையில் 700-க்கும் மேற்பட்ட கைதிகள் இருக்கும் நிலையில், மின் தடை ஏற்பட்டதால், சிறைச்சாலையின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன. 

இதுகுறித்து பேசிய மின்வாரிய அதிகாரிகள், பற்றாக்குறையின் காரணமாக மின் தடை ஏற்பட்டதாக தெரிவித்தனர். 


Next Story