கொடியேற்றத்துடன் தொடங்கியது ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை திருவிழா!
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலில் சித்திரைத்திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது.
ஸ்ரீரங்கம்,
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும், 108 வைனவ திருத்தலங்களில் முதன்மையானதுமாக விளங்கும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலில் ஆண்டுதோரும் சித்திரைத்திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு சித்திரைத்திருவிழா இன்று அதிகாலை 5 மணியளவில் கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. இன்றிலிருந்து 10 நாட்களுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டமானது வருகிற 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேரோட்டம் கோவில் வளாகத்திற்குள்ளேயே எளிய முறையில் நடைபெற்றது.
தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் தேரோட்டத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story