சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம்


சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம்
x
தினத்தந்தி 21 April 2022 4:31 PM IST (Updated: 21 April 2022 4:31 PM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னை ,

நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வந்தது . இதனால் பல மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால், மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் பரவலாக தளர்த்தியது. குறிப்பாக முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என பல மாநிலங்கள் அறிவித்துள்ளது 

இந்த நிலையில், டெல்லி, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா பரவலின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது  . விமான நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர் 

Next Story