பாரதிதாசன் சிலைக்கு ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை


பாரதிதாசன் சிலைக்கு ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 21 April 2022 10:12 PM IST (Updated: 21 April 2022 10:12 PM IST)
t-max-icont-min-icon

பாரதிதாசன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பாரதிதாசன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நினைவு தினம்

புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சந்திர பிரியங்கா, கே.எஸ்.பி., ரமேஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஈஸ்வரன் கோவில் வீதியில் பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பாரதிதாசன் உருவ படத்திற்கு அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சந்திர பிரியங்கா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், கலை பண்பாட்டு துறை செயலாளர் நெடுஞ்செழியன், இயக்குனர்  கந்தன்  என்ற சிவராமன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தேசபக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டன.

அறக்கட்டளை

புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் கோ.பாரதி தலைமையில் பாரதிதாசனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள் வள்ளி, செல்வதுரை, அசோகா, சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story