வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு


வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 21 April 2022 4:56 PM GMT (Updated: 2022-04-21T22:26:36+05:30)

தீயணைப்பு தொண்டு வார கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் அர்ஜூன் சர்மா பரிசு வழங்கினார்

காரைக்கால் மாவட்ட தீயணைப்புத்துறை சார்பில், ஏப்ரல் 14 முதல் 20 வரை தீயணைப்பு தொண்டு வாரம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தீ விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீ விபத்தை அறிவோம், உற்பத்தியை பெருக்குவோம்’ என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா பரிசு வழங்கி பாராட்டினார். இதில் காரைக்கால் தீயணைப்பு துறை அதிகாரி மாரிமுத்து, சுரக்குடி தீயணைப்பு அதிகாரி அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story