பா.ஜ.க. நிர்வாகிகளுடன் நிர்மல்குமார் சுரானா ஆலோசனை


பா.ஜ.க. நிர்வாகிகளுடன் நிர்மல்குமார் சுரானா ஆலோசனை
x
தினத்தந்தி 21 April 2022 10:53 PM IST (Updated: 21 April 2022 10:53 PM IST)
t-max-icont-min-icon

உள்துறை மந்திரி அமித்ஷா வருகையையொட்டி பா.ஜ.க. நிர்வாகிகளுடன் மேலிட பார்வையாளர் நிர்மல் குமார் சுரானா ஆலோசனை நடத்தினார்.

உள்துறை மந்திரி அமித்ஷா வருகையையொட்டி பா.ஜ.க. நிர்வாகிகளுடன் மேலிட பார்வையாளர் நிர்மல் குமார் சுரானா ஆலோசனை நடத்தினார்.
அமித்ஷா வருகை
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 24-ந்தேதி புதுச்சேரி வருகிறார். அரவிந்தர் 150-வது ஆண்டு விழா, புதுவை அரசு விழாக்களில் பங்கேற்கும் அவர் பா.ஜ.க. அலுவலகத்துக்கும் சென்று நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.
உள்துறை மந்திரி அமித்ஷா வருவதை முன்னிட்டு புதுவை மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா இன்று புதுச்சேரி வந்தார். அவர் அமித்ஷாவின் வருகை தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நிர்மல்குமார் சுரானா ஆலோசனை
இந்த ஆலோசனையில் பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், சிவசங்கரன், வெங்கடேசன், அசோக்பாபு, வி.பி.ராமலிங்கம், மாநில துணைத்தலைவர்கள் தங்க.விக்ரமன், அருள்முருகன்,    ரவிச்சந்திரன், முருகன், தீப்பாய்ந்தான் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
அதைத்தொடர்ந்து நிர்மல்குமார் சுரானா அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கும் இடத்தையும் பார்வையிட்டார். அப்போது சபாநாயகர் செல்வம் உடனிருந்தார்.
அதன்பின் பல்கலைக்கழகம் சென்று அங்கு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை பார்வையிட்டார். அப்போது சில ஆலோசனைகளையும் அவர் வழங்கினார்.

Next Story