அரசு பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்


அரசு பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 21 April 2022 11:11 PM IST (Updated: 21 April 2022 11:11 PM IST)
t-max-icont-min-icon

கோரிமேடு அரசு பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

புதுச்சேரி நலவழித்துறை மற்றும் கோரிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம்   சார்பில்  கதிர்காமம்  தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் முனுசாமி தலைமை தாங்கினார். ஆசிரியர் குணசேகரன் வரவேற்றார். கோரிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி சித்ரா முன்னிலை வகித்தார். மருத்துவர் முல்லை, செவிலியர்கள் ராஜலட்சுமி, வனிதா ஆகியோர் 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசியை செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார உதவியாளர்கள் சிவக்குமார், ஜெகநாதன் ஆகியோர் செய்திருந்தனர்

Next Story