சென்னையில், உதவி போலீஸ் கமிஷனர்கள் அதிரடி மாற்றம் டி.ஜி.பி. உத்தரவு


சென்னையில், உதவி போலீஸ் கமிஷனர்கள் அதிரடி மாற்றம் டி.ஜி.பி. உத்தரவு
x
தினத்தந்தி 22 April 2022 5:43 AM IST (Updated: 22 April 2022 5:43 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் உதவி போலீஸ் கமிஷனர்களை மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

1.எஸ்.செந்தில்-சென்னை உளவுப்பிரிவு உதவி கமிஷனராக பதவி வகிக்கும் இவர், சென்னை மேற்கு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

2.ஜி.புகழ்வேந்தன்-சென்னை கிண்டி உதவி கமிஷனராக பணியில் உள்ள இவர், மீனம்பாக்கம் உதவி கமிஷனராக பதவி ஏற்பார்.

3.பி.சகாதேவன்-சென்னை வில்லிவாக்கம் உதவி கமிஷனராக உள்ள இவர், ஆவடி கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.

4.கே.ஆர்.உக்கிரபாண்டியன்-சென்னை ராயபுரம் உதவி கமிஷனராக பதவியில் உள்ள இவர், தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

5.வரதராஜன்-திருப்பூர் கே.வி.ஆர்.நகர் உதவி கமிஷனராக பதவி வகிக்கும் இவர், சென்னை திருமங்கலம் உதவி கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

6.எம்.குமரகுருபரன்-சென்னை மின்சாரவாரிய விஜிலன்ஸ் பிரிவில் துணை சூப்பிரண்டாக பொறுப்பு வகிக்கும் இவர், சென்னை அபாயகரமான குற்ற வழக்கு பிரிவு (தெற்கு)க்கு மாற்றப்பட்டார். இது புதிய பதவி ஆகும்.

மெல்வின் ராஜாசிங்

7.மெல்வின் ராஜாசிங்-மாநில சைபர் கிரைம் துணை போலீஸ் சூப்பிரண்டான இவர், மாநில குற்ற ஆவண காப்பகத்திற்கு மாற்றப்பட்டார்.

8.பி.கே.பிரகாஷ்-டி.ஜி.பி.அலுவலகத்தில் உள்ள மாநில நில அபகரிப்பு சிறப்பு தடுப்பு பிரிவில் துணை சூப்பிரண்டாக உள்ள இவர், சென்னை சாலை பாதுகாப்பு போக்குவரத்து போலீஸ் பிரிவில் துணை சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார். இது புதிய பதவி.

9.மேத்யூ டேவிட்-புதுக்கோட்டை மாவட்ட, மனித உரிமை சமூக நீதி பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியில் உள்ள இவர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் காவலர் நலப்பிரிவு உதவி கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

10.கொடி லிங்கம்-சென்னை துறைமுகம் உதவி கமிஷனராக பதவி வகிக்கும் இவர், தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக (1) பொறுப்பு ஏற்பார்.

11.அர்னால்டு ஈஸ்டர்-மீனம்பாக்கம் உதவி கமிஷனராக உள்ள இவர், ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் குற்ற ஆவண காப்பக உதவி கமிஷனராக பதவி ஏற்பார்.

மக்கள் தொடர்பு உதவி கமிஷனர்

12.தனபாலன்-அசோக்நகர் உதவி கமிஷனராக பதவி வகிக்கும் இவர்,

தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு உதவி கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

13.சார்லஸ் சாம்ராஜதுரை-சென்னை உளவுப்பிரிவு உதவி கமிஷனராக உள்ள இவர், ராயப்பேட்டை உதவி கமிஷனராக மாற்றப்பட்டார்.

14.எஸ்.லட்சுமணன்-ராயப்பேட்டை உதவி கமிஷனராக பதவி வகிக்கும் இவர், ராயபுரம் உதவி கமிஷனராக பதவி ஏற்பார்.

15.எஸ்.சிவா-கடலூர் மாவட்டம், திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியில் உள்ள இவர், சென்னை கிண்டி உதவி கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

16.சவரிநாதன்-தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மக்கள்தொடர்பு உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டு இருந்தார். அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவர் ஏற்கனவே பணியாற்றிய டி.ஜி.பி. அலுவலக கட்டுப்பாட்டு அறை துணை சூப்பிரண்டாக நீடிப்பார்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Next Story