திருச்சி: பெண் பயணியை தாக்கி பணம், செல்போன் பறிப்பு - 3 திருநங்கைகள் அட்டூழியம்
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் 3 திருநங்கைகள் இரவில் பெண் பயணியை தாக்கி பணம், செல்போன் பறித்து சென்றனர்.
திருச்சி:
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று இரவு 11 மணியளவில் ஜெரீனா (வயது 33) புதுச்சேரி செல்வதற்காக வந்தார். பின்னர் அங்கிருந்து சத்திரம் பஸ் நிலையம் சென்று புதுச்சேரி செல்வதற்காக டவுன் பஸ்சுக்காக தனது உடமைகளுடன் காத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த 3 திருநங்கைகள், ஜெரீனாவை ஆசிர்வாதம் செய்வதாக கூறி அவரிடம் இருந்து செல்போன் மற்றும் 3,400 ரூபாய் பறித்து விட்டு அவரை கீழே தள்ளி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
அந்த பெண் மயக்கம் அடைந்த நிலையில் அக்கம் பக்கத்தினர், ஓடி வந்து காப்பாற்றி தேவையான உதவிகளை செய்தனர். மேலும் அங்கு ரோந்து வந்த போலீசாரிடம் ஜெரீனா புகார் கூறினார். அவர்கள், பஸ் நிலையத்தில் உள்ள .சி.சி.டி.வி.கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, பெண் பயணியை தாக்கிய திருநங்கைகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் திருநங்கைகள் பயணிகளைத் தாக்கி வழிப்பறியில் ஈடுபடுவது தொடர்பாக ஏற்கனவே கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் அஜய் தங்கம் அவர்களை அழைத்து எச்சரிக்கை விடுத்திருந்தார். அந்த எச்சரிக்கையை மீறி நேற்று இரவு திருநங்கைகள் வழிப்பறியில் ஈடுபட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story