டெல்லியில் இருந்து கவர்னர் தமிழகம் திரும்பினார்


கோப்புக்காட்சி
x
கோப்புக்காட்சி
தினத்தந்தி 22 April 2022 8:57 AM IST (Updated: 22 April 2022 8:57 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி வந்த கவர்னர், தமிழக அரசின் இல்லத்துக்கே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி, 

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, நேற்று முன்தினம் காலை சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு மதியம் டெல்லிக்கு வந்தார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இவரது திடீர் டெல்லி பயணம் குறித்து பலவாறாக யூகங்கள் கிளம்பின. ஆனால், அதுபற்றி எந்தவொரு நிகழ்வும் டெல்லியில் நடைபெற்றதாக தெரியவில்லை.

டெல்லி வந்த கவர்னர், தமிழக அரசின் இல்லத்துக்கே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் டெல்லியில் உள்ள தனது சொந்த இல்லத்திலேயே தங்கினார். சொந்த வேலைகள் நிமித்தமாக கவர்னர் டெல்லி வந்ததாக தெரிந்த வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. பின்னர், நேற்று மாலை 5.45 மணி விமானத்தில் அவர் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

Next Story