வண்டலூர் பூங்காவில் பாம்புகள் இல்லம் இன்று முதல் மீண்டும் திறப்பு


வண்டலூர் பூங்காவில் பாம்புகள் இல்லம் இன்று முதல் மீண்டும் திறப்பு
x
தினத்தந்தி 22 April 2022 9:42 AM IST (Updated: 22 April 2022 9:42 AM IST)
t-max-icont-min-icon

வண்டலூர் பூங்காவில் பாம்புகள் இல்லம் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வண்டலூர்:

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், கொரோனா காலகட்டத்தில் மூடப்பட்ட 7 பார்வையாளர்கள் காணும் இருப்பிடங்கள் படிப்படியாக பார்வையாளர்களுக்காக திறக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பாம்புகள் இருப்பிடம் ஊர்வன இல்லம், இரவு விலங்குகள் இருப்பிடம் மற்றும் சிறுவர் பூங்கா போன்றவை, முதல் கட்டமாக கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகி்றது. 

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் ஒன்றான, சிறுவர் பூங்கா வார நாட்களில் மட்டும் பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும். வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் சிறுவர் பூங்காவுக்கு அனுமதியில்லை என பூங்கா நிர்வாக தெரிவித்துள்ளது.


Next Story