10,11 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு: இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!
10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று பிற்பகலில் வெளியிடப்படுகிறது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதன் காரணமாக 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்து இருந்தது.
அதன்படி, இந்த தேர்வுகள் மே 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கான கால அட்டவணையும் ஏற்கெனவே வெளியிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தேர்வு எழுதும் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று பிற்பகலில் வெளியிடப்படும் என்றும், பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story