தமிழகத்தில் “ மாஸ்க் ”அணியாவிட்டால் ரூ.500 அபராதம்..!


தமிழகத்தில் “ மாஸ்க் ”அணியாவிட்டால் ரூ.500 அபராதம்..!
x
தினத்தந்தி 22 April 2022 11:15 AM IST (Updated: 22 April 2022 11:24 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது. அக்கறையுடன் மக்கள் முகக்கவசம் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நோய்த்தொற்று அறிகுறி இருந்தால் தவறாமல் மருத்துவமனை சென்று பரிசோதனை எடுத்து கொள்ளவேண்டும்.

தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.  அபராதம் வசூலிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். 

கொரோனா அதிகரிப்பதால் பதற்றம் அடைய தேவை இல்லை என மத்திய அரசே கூறியுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே வழங்கி உள்ளோம்.  சென்னை ஐஐடியில் கொரோனா உறுதியான மாணவர்கள் உடல்நிலை சீராகவே உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story