திருமண நிச்சயம் செய்த பெண் காதலருடன் ஓட்டம்; வாலிபர் தற்கொலை
சென்னை அருகே திருமணம் செய்ய நிச்சயித்த பெண் காதலருடன் சென்றுவிட்டதால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
மாமல்லபுரம்:
சென்னை கண்ணகி நகரை சேர்ந்த நாகலிங்கம் என்பவரது மகன் மதுரைமுத்து (வயது.30) தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயம் செய்த பெண் காதலருடன் ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மதுரைமுத்து கோவளம் அடுத்த வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையோர மரத்தின் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாமல்லபுரம் போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story