கடலூர்: மணிக்கு ஒருமுறை மின்தடை.. போராட்டத்தில் குதித்த மக்கள்


கடலூர்: மணிக்கு ஒருமுறை மின்தடை.. போராட்டத்தில் குதித்த மக்கள்
x
தினத்தந்தி 22 April 2022 12:17 PM IST (Updated: 22 April 2022 12:17 PM IST)
t-max-icont-min-icon

கடலூரில் மணிக்கு ஒருமுறை மின் தடை ஏற்படுவதால், பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மணிக்கு ஒருமுறை மின் தடை ஏற்படுவதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கையில் தீப்பந்தம் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலத்தூர், சித்தூர். தொழுதூர் உள்ளிட்ட20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஒரு வார காலமாக மணிக்கு ஒருமுறை எவ்வித அறிவிப்பும் இன்றி மின் தடை ஏற்படுவதால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

மேலும், இரவு நேரத்தில் மின் தடை ஏற்படுவதால், கொசுக்கடிக்கு மத்தியில் தூக்கம் இல்லாமல் தவிப்பதாக குற்றம் சாட்டியுள்ள மக்கள், கையில் தீப்பந்தம் ஏந்தியபடி வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story